பொள்ளாச்சி
பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜப்லா தலைமையில் போலீசார் சம்பவத்தன்று கோட்டூர் மெயின்ரோடு மேம்பாலம் பகுதியில் தீவிர ரோந்து சுற்றி வந்தனர்.
அப்போது அங்கு மறைந்துஇருந்து சட்டவிரோதமாக திருப்பூர் கே.என்.பி சுப்பிரமணி நகரைச் சேர்ந்த முகமது அப்பாஸ் (27)என்பவர் கஞ்சா விற்பனை செய்துகொண்டுஇருப்பதை கண்டனர்.
இதனையடுத்து, முகமது அப்பாஸை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.