மோட்டார்சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

மோட்டார்சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2021-07-25 15:24 GMT
தேவதானப்பட்டி:
பெரியகுளம் அருகில் உள்ள எண்டப்புளியை சேர்ந்தவர் சென்றாயன்(வயது 28). கூலித்தொழிலாளி. நேற்று இவர் அதே ஊரை சேர்ந்த தனது நண்பர் ஜெய்கணேசுடன்(28) தேவதானப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிளை ஜெய்கணேஷ் ஓட்டினார். பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோடு காமாட்சிபுரம் பிரிவு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் படுகாயமடைந்த சென்றாயன் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்