கூடலூர் அருகே சூறைக்காற்றில் வாழைமரங்கள் முறிந்து சேதம்

கூடலூர் அருகே சூறைக்காற்றில் வாழைமரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

Update: 2021-07-25 15:07 GMT
கூடலூர்:
கூடலூர் பகுதியில் கடந்த சில வருடங்களாக விவசாயிகள் ஒட்டுரக திசுவாழைகளை சொட்டுநீர்பாசனம் மூலம் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் கூடலூர் அருகே உள்ள கழுதைமேடு புலம் பகுதியில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு  சூறைக்காற்று வீசியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. இதனால் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்