ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புங்கவர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 61). இவர் குறுக்குசாலை மெயின் பஜாரில் மளிகை கடை வைத்து உள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசில் முருகன் புகார் செய்தார். புகாரின் பெயரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். மேலும், போலீசார் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளை காட்டுநாயக்கன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (27) என்பவர் திருடி சென்றதை கண்டு பிடித்தனர். இதை தொடர்ந்து முருகனை போலிசார் கைதுசெய்தனர். அவரிடம் இருநது மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.