தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 19 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 19 பேரை போலீசார் கைது செய்தனர்;
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு இடங்களில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 188 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 14 போலீஸ் நிலையங்களில் சம்மந்தப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.