தாராபுரம்
தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி சுகாதார வட்டார மருத்துவர் தேன்மொழி தலைமையில் அலங்கியம், பொன்னாபுரம் பகுதியில் தினசரி கொரோனா பரிசோதனை செய்து முன்தினம் மாதிரிகளை கோவை ஈ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அதன் முடிவுகள் வந்தன. அதில் 3 பேர்களுக்கு மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.