திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது
உத்திரமேர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன் மற்றும் விஜயகாந்த் உத்திரமேரூர் சுற்றியுள்ள பகுதியில் கண்காணித்து வந்தனர். உத்திரமேரூர் அடுத்த பழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 44) மானாமதி கிராமத்தை சேர்ந்த முத்துவேல் (36) இருவரும் திருட்டுத்தனமாக அரசு மதுபாட்டில்களை விற்றதால் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.