நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்முனைவோர் மாதிரி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம்,
தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மீனவர்கள், மீன்வளர்ப்போர், சுய உதவி குழுக்கள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள், மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவினருக்கு 25 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மகளிருக்கு 30 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் சென்னை, காஞ்சீபுரம் (இருப்பு) நீலாங்கரை எண் 2/601, கிழக்கு கடற்கரை சாலை, மீன்வளம் மற்றும் மீனவர் நல துறை, உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044- 24492719 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த திட்டத்திற்கான விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் இந்த மாதம் 31-ந்தேதி ஆகும். மேலும் இதற்குரிய விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.