குட்கா விற்ற பெட்டிக்கடைக்கு ‘சீல்’ அதிகாரிகள் அதிரடி

அரசு தடை செய்த குட்கா விற்ற பெட்டிக்கடைக்கு ‘சீல்’ அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-07-24 23:30 GMT
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா நெடியம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணகுமார் என்பவருக்கு சொந்தமான பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பாக்கெட்டுகள் ரகசியமாக விற்பனை செய்வதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருத்தணி கோட்டாட்சியர் சத்யா உத்தரவின்பேரில், பள்ளிப்பட்டு தாசில்தார் கதிர்வேல், வருவாய் ஆய்வாளர் சுந்தரவேல் மற்றும் பள்ளிப்பட்டு சப-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அந்த கிராமத்திற்கு நேற்று சென்று அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது கிருஷ்ணகுமாருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் அரசு தடை செய்த குட்கா புகையிலை பாக்கெட்டுகள் அதிக அளவில் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குட்கா புகையிலை பாக்கெட்டுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெட்டி கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்