ஈரோடு மாவட்டத்தில் நூலகங்கள் திறப்பு

ஈரோடு மாவட்டத்தில் நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. புத்தகங்கள் அடுக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-07-24 20:59 GMT
ஈரோடு மாவட்டத்தில் நேற்று நூலகங்கள் திறக்கப்பட்டன. கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது நூலகங்களும் அடைக்கப்பட்டன. ஊரடங்கு தளர்வுகள் ஒவ்வொரு கட்டமாக வழங்கப்பட்டது. தற்போது நூலகங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.
கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் போட்டித்தேர்வு எழுதும் பெரும்பாலானவர்கள் நூலகங்களை நம்பியே உள்ளனர். எனவே இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ-மாணவிகள் தங்கள் எதிர்கால கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்காக நல்ல நூல்களை படிக்கும் வகையில் நூலகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நேற்று நூலகங்கள் திறக்கப்பட்டன.
ஈரோடு வ.உ.சி.பூங்கா அருகே உள்ள மாவட்ட நூலகத்தில் நேற்று நூலக பணியாளர்கள் வேலைக்கு வந்தனர். நூலகத்தில் புதிதாக வந்து உள்ள புத்தகங்களை அவர்கள் பிரித்து அடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுபோல் அனைத்து நூலகங்களிலும் நூலகர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் வேலையை நேற்று தொடங்கினார்கள்.
நூலகங்களை மாணவ-மாணவிகள், வேலை தேடும் இளைஞர்-இளம்பெண்கள் முறையாக பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்