மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-24 20:30 GMT
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 110 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று மேலும் 107 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 22 பேரும், சேலம் ஒன்றிய பகுதியில் 44 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 21 பேரும், நகராட்சி பகுதியில் 6 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 14 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 பேர் பலி
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 153 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து 1,548 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலத்தை சேர்ந்த 70 வயது 2 முதியவர்களும், 63 வயது மூதாட்டியும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில்பலியானார்கள்.
இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,537 ஆக உயர்ந்துள்ளது குறிப் பிடத்தக்கது.

மேலும் செய்திகள்