பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டையில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-07-24 20:06 GMT
செங்கோட்டை:
பாரதீய ஜனதா கட்சியினர் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்டோரை அவதூறாக பேசிய கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர பா.ஜனதா தலைவர் வேம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமராஜா, துணைத்தலைவர் பாலகுருநாதன், செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி நகர தலைவர் குத்தாலிங்கம், ஒன்றிய தலைவர்கள் முருகன், சரவணன், விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் தளவாய், இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்