மோகனூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

மோகனூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-24 19:24 GMT
மோகனூர்:
ராணுவ வீரர் கொலை
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40). இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பார்கவி (25). இவர்கள் மோகனூர் அருகே உள்ள ராசிகுமரிபாளையம் பகுதியில் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி சிவகுமார் வளையப்பட்டி சாலையில் கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 
அவருடைய உடலை கைப்பற்றிய மோகனூர் போலீசார், கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சிவகுமாரின் மனைவி பார்கவி, இவருடைய கள்ளக்காதலன் செல்வராஜ் (39) ஆகியோர் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்தது தெரியவந்தது. 
மேலும் 2 பேர் கைது
இதையடுத்து போலீசார் பார்கவி, கள்ளக்காதலன் செல்வராஜ், பார்கவியின் தாயார் அம்சவள்ளி (49) மற்றும் கூலிப்படையை சேர்ந்த 6 பேர் உள்பட மொத்தம் 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் முன்னாள் ராணுவ வீரர் சிவகுமார் கொலையில் தொடர்புடைய சேலம் மாவட்டம் மல்லூர் அம்பேத்கர்நகரை சேர்ந்த சின்னு என்பவரின் மகன் கோகுல் (21), திருமலைகிரியை சேர்ந்த சீனிவாசன் மகன் நரேந்திரன் (21) ஆகிய 2 பேரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கைது செய்தார். பின்னர் இவர்கள் 2 பேரும் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்