சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சரணாலயத்தில் சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

Update: 2021-07-24 19:23 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையை பொறுத்தவரை புலிகள், சிறுத்தைகள், காட்டுயானைகள், காட்டெருமைகள், கரடிகள், ராஜ நாகங்கள், புள்ளி மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.  இருப்பினும் சாம்பல் நிறத்தை உடைய அணில்கள் அதிகமாக இருப்பதால் இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை தமிழக அரசு சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் என அறிவித்துள்ளது. சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் என அறிவித்த பெயருக்கு ஏற்றாற்போல இந்த பகுதியில் ஆயிரக்கணக்கில் சாம்பல் நிற அணில்கள் உள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-  சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு தற்போது சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  ஆரம்பத்தில் மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதியில் உள்ள ஏராளமான மரங்களில் இருந்த சாம்பல் நிற அணில்கள் தற்போது தனியாருக்கு சொந்தமான தோட்டங்களிலும் அதிக அளவு வசித்து வருகின்றன. அதுவும் ஊரடங்கு நேரத்தில் ஆட்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத நேரத்தில் அணில்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்