அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-24 18:18 GMT
கரூர்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் 90 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையில் நேற்று முன்தினம் நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 85.01 அடியாக இருந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4860 கன அடி வந்து கொண்டிருந்தது. மேலும் அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதியும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் அதிகப்படியாக வரும் உபரி நீரை அமராவதி ஆற்றில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து விட்டுள்ளனர். இதனையடுத்து கரூர் நகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டான் கோவில், பெரிய ஆண்டான்கோவில், படிக்கட்டு துறை, வஞ்சியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் அமராவதி ஆற்றில் வெள்ளம் வருவதை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும், ஆற்றில் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ ஆற்றில் இறங்க கூடாது எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என ஒலிப்பெருக்கி மூலம் (தண்டோரா) அறிவிப்பு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்