போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு நாளை தொடக்கம்

புதுக்கோட்டையில் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. இதையொட்டி ஆயுதப்படை மைதானத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-07-24 17:32 GMT
புதுக்கோட்டை, ஜூலை.25-
புதுக்கோட்டையில் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. இதையொட்டி ஆயுதப்படை மைதானத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உடற்தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணையம் காவல்துறை,சிறைத்துறைமற்றும்தீயணைப்புதுறைகளுக்கான 2-ம் நிலைகாவலர்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ள இத்தேர்வில் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் 1,722 பேரும், பெண்கள் 891 பேரும் கலந்து கொள்ள உள்ளனர். தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நுழைவுச்சீட்டினை எடுத்து வரவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னேற்பாடு பணிகள்
உடற்தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட ைவகள் நடத்தப்பட உள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெறும். இந்த நிலையில் தேர்வு நடைபெற உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஓட்டப்பந்தய மைதானத்தில் கோடுகள் வரையப்பட்டும், நீளம் தாண்டுதலில் மண்கள் குவிக்கப்பட்டும், உயரம் தாண்டுதலுக்கான கம்பங்கள் உள்ளிட்டவை தயாராக வைக்கும் பணி நேற்று நடைபெற்றது. மேலும் கயிறு ஏறுதலுக்கான இடத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. தினமும் 500 பேர் கலந்து கொள்ளும்படி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வையொட்டி ஆள் மாறாட்டம், முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தேர்வில் கலந்து கொள்ள உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்