எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழக்கரை,
மத்திய அரசு கொண்டு வந்த மீனவர்களுக்கு எதிரான மசோதாவை கண்டித்து கீழக்கரை கடற்கரை ஜெட்டி பாலத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மீனவர்களுக்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மேற்கு தொகுதி துணை தலைவர் நூருல் ஜமான் தலைமையில் மாவட்ட தொகுதி நகர் நிர்வாகிகள் முன்னிலையில் நகர் தலைவர் ஹமீது பைசல் வரவேற்றார்.விவசாய அணி மாநில செயலாளர் முகமது அப்துல்லா கருத்துரை வழங்கினார். மாநில பேச்சாளர் ஜஹாங்கீர் அரூஸி கண்டன உரை ஆற்றினார். பொருளாளர் தாஜுல் ஆமீன் தொகுப்புரை வழங்கினார். உறுப்பினர்கள் சலீம், நைனா முகமது உள்பட பலர் கலந்துகொண்டு மீனவர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். முடிவில் கீழக்கரை நகர் செயலாளர் பகுருதீன் நன்றி கூறினார். பாதுகாப்பு ஏற்பாடுகளை கீழக்கரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.