கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் சரக டி.ஐ.ஜி. உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சர்க்கிள் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், கிருஷ்ணகிரி தாலுகா சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த சுரேஷ்குமார், சேலம் சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓசூர்
அதே போல சேலம் மாவட்டம் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் வீரகனூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி பிறப்பித்துள்ளார்.