ஹீமோபீலியா நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி

ஹீமோபீலியா நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி

Update: 2021-07-24 16:32 GMT
கோவை

மனித உடலில் சிறு காயம் ஏற்பட்டாலும் ரத்தம் நிற்காமல் தொடர்ந்து வெளியேறினால் அது ரத்தம் உறையாமை (ஹீமோபீலியா) பாதிப்பாக இருக்கலாம். 

அந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க கோவை அரசு ஆஸ்பத்திரியில் மையம் உள்ளது. அங்கு சிகிச்சை பெறுபவர்க ளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

இதை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இது குறித்து டீன் நிர்மலா கூறியதாவது

 கோவை மாவட்டத்தில் 350 பேருக்கு ஹீமோபீலியா என்ற ரத்த உறையாமை குறைபாடு உள்ளது. அதில் 250 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு அதிகம்.

அதை தடுக்க அவர்களுக்கு பேக்டர் 8 அண்டு 9 என்ற மருந்து செலுத்தி கண்காணிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் அவர்களுக்கு ரத்தக்கசிவு ஏற்பட வில்லை. 

ஒரே நாளில் 50 நோயாளிகள் மற்றும் அவர்களை பராமரிக்கும் 50 பேர் என மொத்தம் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்