ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்து நெரிசல்
ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்து நெரிசல்
கோவை
கோவை மாவட்டத்தில் நாளுக்குநாள் வாகன போக்குவரத்து அதிக ரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச் சோடி கிடந்தன.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.
பொது போக்குவரத்தும் தொடங் கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்த கோவை டவுண்ஹால், ஒப்பணக்காரவீதியில் நேற்று வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது.
இதனால் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத அளவிற்கு கூட்டம் இருந்தது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். டவுண்ஹால் பகுதியில் சிலர் முகக்கவசம் அணியாமல் செல்வதை காண முடிந்தது.
கோவை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் அலட்சியம் காரணமாக மீண்டும் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
எனவே மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான தடுப்பு நடவடிக்கையை கையாள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.