முதியவரின் உயிரை பறித்த கொரோனா

திண்டுக்கல்லில் கொரோனாவுக்கு முதியவர் உயிரிழந்தார்.

Update: 2021-07-24 16:08 GMT

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக வெகுவாக குறைந்து வருகிறது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த சின்னாளபட்டியை அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்த 80 வயது முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 618 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 78 ஆனது. அதேநேரம் 19 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அந்த வகையில் இதுவரை 31 ஆயிரத்து 224 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். நேற்றைய நிலவரப்படி 236 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்