அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு
அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு;
திருப்பூர்
திருப்பூர் டி.எஸ்.கே. மருத்துவமனை வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு புத்தறிவு பயிற்சி நேற்று நடைபெற்றது. தாய், சேய் நல அட்டை வழங்குதல், சுகாதாரம் பேணுதல், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, கர்ப்பிணிகளுக்கான சத்துணவு உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
டாக்டர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டவர்கள் பயிற்சி வழங்கினார்கள். இந்த பயிற்சி வகுப்புக்கு வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி ஜெயலதா தலைமை தாங்கினார். அங்கன்வாடி உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.
--------------------