காங்கேயம்
காங்கேயம் அருகே சிக்கரசம்பாளையம் என்ற பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து காங்கேயம் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒரு அறையில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதுதெரிய வந்தது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்த மாறன் வயது 60, ரங்கசாமி 31, ஆனந்தராஜ்30, கணேசன் 43, முத்துமணி 27, சின்னாரப்பட்டி பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் 36 ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 270 ரூபாயை கைப்பற்றினர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.