வேலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
இந்து மத கடவுள்கள், பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
அவரை கண்டித்தும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ஜ.க. இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் எஸ்.எல்.பாபு, மாவட்ட செயலாளர் சரவணக்குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், துணைச் செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.சி. மாவட்ட செயலாளர் எஸ்.கே.மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.