அனுமதியும் ரத்து செய்யப்படும் குட்கா, மாவா விற்றால் கடைகளுக்கு ‘சீல்’

“குட்கா, மாவா போன்ற போதைப்பொருள் விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்.

Update: 2021-07-24 05:18 GMT
சென்னை,

குட்கா, மாவா போன்ற போதைப்பொருட்களை முழுவதுமாக ஒழித்து கட்டுவது தொடர்பாகவும், இதற்கு வியாபார பிரமுகர்களின் ஆதரவை கேட்பதற்காகவும் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி, உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் தே.மு.தி.க. வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன் உள்ளிட்ட ஏராளமான வியாபார பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.

பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி, உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறும்போது, “குட்கா, மாவா போன்ற போதைப்பொருள் விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும். அவற்றின் அனுமதியும் ரத்து செய்யப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

மேலும் செய்திகள்