அம்மச்சார் அம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம்
மதுராந்தகம் அருகே அம்மச்சார் அம்மன் கோவில் விழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த முதுகரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அம்மச்சார் அம்மன் கோவில் விழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. 108 பெண்கள் மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மச்சார் அம்மன் கோவிலுக்கு பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு அம்மச்சார் அம்மன் திருவீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முதுகரை கிராம மக்கள் செய்திருந்தனர்.
காஞ்சீபுரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.