படப்பை அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

படப்பை அருகே ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி அரசு அரசு நிலத்தை மீட்டனர்.

Update: 2021-07-24 04:04 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் செரப்பனஞ்சேரி குறுவட்டத்திற்கு உட்பட்ட படப்பை அடுத்த நீலமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மேய்க்கால் வகைப்பாட்டில் உள்ள 3 ஏக்கர் நிலத்தில் ஒரு சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். 

அவரது உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. முத்துமாதவன், தாசில்தார் பிரியா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் செரப்பணஞ்சேரி வருவாய் ஆய்வாளர் கருணாநிதி தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி அரசு நிலத்தை மீட்டனர்.

அவருடன் கிராம நிர்வாக அலுவலர் வீரராகவன், வருவாய் துறை அலுவலர்கள் பலர் இருந்தனர். மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்