படப்பை அருகே தனியார் தொழிற்சாலையில் திருட்டு
படப்பை அருகே தனியார் தொழிற்சாலையில் மருத்துவ உபகரண பொருட்கள் தயாரிக்கும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த எருமையூர் அருகே மருத்துவ உபகரணங்கள் தாயரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 8 பேர் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. தொழிற்சாலையில் இரும்பு ஷட்டர் உள்ள பகுதியின் பக்கவாட்டில் உள்ள இரும்பு ஷீட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த மருத்துவ உபகரண பொருட்கள் தயாரிக்கும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து தொழிற்சாலையின் மேலாளர் சிவராமன் (வயது 32) சோமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைரேகை பதிவுகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். தொழிற்சாலையில் திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1½ லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.