கர்நாடகத்தில் புதிதாக 1,705 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது;
பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 25 ஆயிரத்து 426 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 1,705 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 91 ஆயிரத்து 699 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 30 பேர் உயிரிழந்தனர்.
இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 127 ஆக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,243 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 31 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 1.35 ஆக உள்ளது.
புதிதாக அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 400 பேர், தட்சிண கன்னடாவில் 295 பேர், ஹாசனில் 83 பேர், மைசூருவில் 157 பேர், உடுப்பியில் 131 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 3 பேரும், கோலார், தட்சிண கன்னடாவில் தலா 4 பேரும் என மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.