அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்குடி,
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாத முதல் வெள்ளி
கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறவில்லை. பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இந்த ஆண்டும் கொரோனா 2-வது பரவல் தொடங்கி தற்போது தொற்று குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவில்களில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி விழாக்களை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
பக்தர்கள் கூட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன், சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில், காரைக்குடியில் உள்ள மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில், செக்காலை பெரிய முத்துமாரியம்மன் கோவில், கழனிவாசல் காமாட்சியம்மன் கோவில், கல்லூரி சாலையில் உள்ள கொல்லன்காளியம்மன் கோவில், கணேசபுரம் மாரியம்மன் கோவில், சிங்கம்புணரி வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவில், சிங்கம்புணரி நாடார்பேட்டை பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் பிரான்பட்டி மலைநாச்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கூழ்
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அந்தந்த கோவில்களில் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.