நகைக்கடையில் திருடிய பெண் ஊழியர் கைது

நகைக்கடையில் திருடிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-23 20:21 GMT
மதுரை, ஜூலை
மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியை சேர்ந்தவர் ரகு (வயது 38). இவர் தல்லாகுளம் பகுதியில் ஒரு வணிக வளாகத்தில் உள்ள நகைக்கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தல்லாகுளம் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அந்த புகாரில் கடந்த சில நாட்களாக கடையில் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போகிறது. அதனை திருடியவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அது குறித்து தல்லாகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் விசாரணை மேற்கொண்டார். அவர் அந்த கடையில் இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில், அந்த நகைக் கடையில் வேலை பார்க்கும் செல்லூர் மேலஅண்ணாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த கீதா (37) என்ற பெண் நகைகளை திருடியது தெரியவந்தது. 
பின்னர் போலீசார் அவரிடம் விசாரித்த போது அவர் நகைகள் திருடியதை ஒப்புக் கொண்டார். அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கீதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்