சிகிச்சையில் இருந்த கைதி தப்பி ஓட்டம்
சிகிச்சையில் இருந்த கைதி தப்பி ஓடினார். போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்
மதுரை,ஜூலை
மதுரை கீழ்மதுரை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்ராஜ் (வயது 27). மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இவர் திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தினர். சில மணி நேரங்களில் மனோஜ் குமாரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதுபோல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட பெண் கைதி ஒருவர் தப்பி ஓடி, அவரையும் போலீசார் 2 மணி நேரத்தில் பிடித்தது குறிப்பிடத்தக்கது.