கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டை அருகே கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.;

Update: 2021-07-23 19:36 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படை வீட்டைச்சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 55). இவருடைய மனைவி அல்போன்சா (50), மகள் மீனா (27). இவர்களுக்கும், இவர்களுடைய வீட்டின் அருகே வசிக்கும் தர்மலிங்கம் என்பவருக்கும் வழிப்பாதை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தர்மலிங்கத்திற்கும், பாலகிருஷ்ணன் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தர்மலிங்கம் ஆத்திரமடைந்து பாலகிருஷ்ணன், அல்போன்சா, மீனா ஆகிய 3 பேரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த 3 பேரும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்