முசிறி, துறையூர், சமயபுரம், துவரங்குறிச்சி பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்ற 11 பேர் கைது

முசிறி, துறையூர், சமயபுரம், துவரங்குறிச்சி பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-07-23 19:22 GMT
துவரங்குறிச்சி, 

முசிறி, துறையூர், சமயபுரம், துவரங்குறிச்சி பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலை பொருட்கள் விற்பனை

முசிறி - தா.பேட்டை சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பெட்டிக்கடையில் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக கடை உரிமையாளர் மோகன் (வயது 45) என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து முசிறி அருகே தும்பலம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (35), சிட்டிலரை கிராமத்தை சேர்ந்த முருகவேல் (42) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் புகையிலை பொருட்களை நாமக்கல் பகுதியில் மொத்தமாக வாங்கி வந்து கடைகளில் சில்லறை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து போலீசார் சிட்டிலரை மற்றும் தும்பலம் ஆகிய பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  மேலும் மோகன், செல்வம், முருகவேல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் புகையிலை பொருட்களை விற்க கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

துறையூர், சமயபுரம்

இதுபோல் துறையூர் ஆலமரம் சந்தில் உள்ள கடைகளில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன் குமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுரேஷ்(46) கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அங்கிருந்து 105 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடை ஊழியர் பிரேம்குமாரை (26) போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுரேைச போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் இனாம் சமயபுரத்தில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமியை(63) சமயபுரம் போலீசார் கைது செய்து 20 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

துவரங்குறிச்சி

இதுபோல் துவரங்குறிச்சி பஸ்நிலையம் பகுதியில் உள்ள 3 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக முனியப்பன் (41), நாகப்பன் (61), ஜெகநாதன் (51) ஆகியோரை துவரங்குறிச்சி போலீசாரும், வளநாடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற அழகப்பன்(45), சந்திரசேகர்(35), பாலாஜி(25) ஆகியோரை வளநாடு போலீசாரும் கைது செய்தனர். அவா்களிடம் இருந்து 33 புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்