வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை- பணம் திருட்டு

கூடங்குளத்தில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர் திருடிச் சென்றார்.;

Update: 2021-07-23 19:22 GMT
கூடங்குளம்:
கூடங்குளத்தில் மேற்கு பைபாஸ் பகுதியில் வசித்து வருபவர் ராகவன் மகன் ரதீஷ்குமார் (வயது 27). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்வராணி. இவர் தனது கணவர் வேலைக்கு சென்றதும், கூடங்குளத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இதை நோட்டமிட்ட மர்மநபர், நேற்று காலை வீட்டில் யாரும் இ்ல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து நைசாக உள்ளே சென்றார். பின்னர் அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டார்.  இந்த நிலையில் மாலையில் வீடு திரும்பிய ரதீஷ்குமார் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்