பஸ்- ஆட்டோ மோதல்; மாற்றுத்திறனாளி பலி

அம்பையில் பஸ், ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் மாற்றுத்திறனாளி இறந்தார்.

Update: 2021-07-23 19:19 GMT
அம்பை:
அம்பை மேலப்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் நெல்லை செல்வதற்காக, அம்பை அடப்பு தெருவைச் சேர்ந்த டிரைவரான மணிகண்டனுடன் (32) ஆட்டோவில் சென்றார். பின்னர் இரவில் அவர்கள் நெல்லையில் இருந்து அம்பைக்கு ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அம்பை பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, பாபநாசத்தில் இருந்து நெல்லை நோக்கி சென்ற பஸ் எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கந்தசாமி, மணிகண்டன் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கந்தசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கந்தசாமி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்