மனைவியை வெட்டிய தொழிலாளி 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது
கங்கைகொண்டான் அருகே மனைவியை வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் என்ற ராஜ் (வயது 38). கூலி தொழிலாளியான இவர் தனது மனைவி ஊரான கங்கைகொண்டான் அருகே வெங்கடாசலபுரத்தில் வசித்து வந்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வீரபுத்திரனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வீரபுத்திரன், கங்கைகொண்டான் அருகே பருத்திகுளம் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் விரைந்து சென்று, வீரபுத்திரனை கைது செய்தனர். மனைவியை வெட்டிய தொழிலாளி 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.