புதுக்கோட்டை, ஜூலை.24-
புதுக்கோட்டையை சேர்ந்தவர் பாபு. இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். சம்பவத்தன்று இவர் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் செல்லும் போது தடுப்பில் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிசைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பாபு நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.