சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

ஸ்ரீமுஷ்ணத்தில் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாட்டில் சிக்கி பெண் ஒருவர் பலியானார்.

Update: 2021-07-23 17:10 GMT
ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கீழ்புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தபாபு. மாற்றுத்திறனாளி. இவருக்கு சுகந்தி(வயது 35) என்கிற மனைவியும், கனினி (11), ரஞ்சிதா (8) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். கட்டிட தொழிலாளியான சுகந்தி நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் வீதியில் புதிதாக கட்டப்பட உள்ள ஒரு கட்டிடத்துக்கான அஸ்திவாரம் போடும் பணியில் ஈடுபட்டு வந்தார். 
அப்போது பணி நடைபெறும் அருகில் உள்ள வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து சுகந்தி மீது விழுந்தது.

இடிபாட்டில் சிக்கி பெண் பலி

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இடிபாட்டில் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய  சுகந்தியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி சுகந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆனந்தபாபு கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்‌ஷா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். கட்டிட வேலைக்கு சென்ற பெண், வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இடிபாட்டில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்