சிலை திருட்டு வழக்கில் மேலும் 3 பேர் கைது
சிலை திருட்டு வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
வாடிப்பட்டி,ஜூலை
வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் 4 சிலைகள் கடந்த ஜூன் 8-ந்தேதி திருட்டு போனது. இது தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் ஐம்பொன் சிலைகள் என நினைத்து பித்தளை சிலைகளை திருடி ஏமாந்து விட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி மஞ்சள்நீர்காயலைச் சர்ந்த விஸ்வநாதன் மகன் மனோஜ்குமார் (20), கருப்புசாமி மகன் இசக்கிராஜன் (22) மற்றும் திருச்சி செட்டியூரை சேர்ந்த மூர்த்தி மகன் யோகேஸ்வரன் என்ற ஆகாஷ் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.