ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கார் மோதி பலி

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கார் மோதி பலியானார்.;

Update: 2021-07-23 16:56 GMT
பேரையூர், ஜூலை
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள காடனேரியைச் சேர்ந்தவர் மருதப்பன் (வயது 63). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது விவசாயம் செய்து வந்தார். இவர் இருசக்கர வாகனத்தில் டி.கல்லுப்பட்டிக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மதுரை-ராஜபாளையம் சாலையில் டி. கல்லுப்பட்டி அருகே உள்ள வி.அம்மாபட்டி சாலை வளைவில் வந்தபோது, எதிரே வந்த கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மருதப்பன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் கடையநல்லூர் தாலுகா மங்கலத்தை சேர்ந்த முருகேசன் (வயது 37) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்