மறைமுக ஏலம் மூலம் ரூ.7½ லட்சத்துக்கு தேங்காய் வியாபாரம்

மறைமுக ஏலம் மூலம் ரூ.7½ லட்சத்துக்கு தேங்காய் வியாபாரம் நடந்தது.

Update: 2021-07-23 16:50 GMT
வாடிப்பட்டி,ஜூலை.
வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிக துறைக்கு உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு விற்பனைக் குழு கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இதில் 16 விவசாயிகள் 71 ஆயிரத்து 808 தேங்காய்களை 27 குவியல்களாக வைத்திருந்தனர்.
இந்த ஏலத்தில் 16 வியாபாரிகள் கலந்து கொண்டு அதிகபட்ச விலையாக ரூ.12.40-க்கும், குறைந்த பட்சமாக ரூ.9.10-க்கும், சராசரியாக ரூ.10.55-க்கும் ஏலம் எடுத்தனர். இதனால் ரூ.7 லட்சத்து 46 ஆயிரத்துக்கு தேங்காய் வியாபாரம் நடந்தது. அதற்குரிய வங்கி காசோலை உடனடியாக பெறப்பட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதேபோல் 4 விவசாயிகளின் கொப்பரை தேங்காயை 5 வியாபாரிகள் ரூ.96.12-க்கு ஏலம் எடுத்தனர். இதனால் ரூ.5,619-க்கு கொப்பரை தேங்காய் வர்த்தகம் நடந்தது.

மேலும் செய்திகள்