கஞ்சா விற்ற செல்போன் கடைக்காரர் கைது
கஞ்சா விற்ற செல்போன் கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி, ஜூலை.
புதுவை கோலாஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்கப்படுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ், சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது அண்ணா சாலையில் செல்போன் கடை நடத்தி வரும் மணிகண்டன் (40) என்பவரது வீட்டில் 180 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் கஞ்சாவை சிறுசிறு பொட்டலமாக பிரித்து மணிகண்டன் விற்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து கஞ்சா, மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் மணிகண்டன் அடைக்கப்பட்டார்.