குடமுருட்டி ஆற்றங்கரையில் படித்துறை மீண்டும் கட்டப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

வலங்கைமான் மாரியம்மன் கோவில் அருகே குடமுருட்டி ஆற்றங்கரையில் படித்துறை மீண்டும் கட்டப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.;

Update: 2021-07-23 15:13 GMT
வலங்கைமான், 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் வரதராஜன்பேட்டை தெரு பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பாடை காவடி திருவிழா மற்றும் ஆவணி மாத தெப்பத்திருவிழா தமிழக அளவில் பிரசித்தி பெற்றது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைதோறும் இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் அருகில் உள்ள குடமுருட்டி ஆற்றில் புனித நீராடி அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். பக்தர்களின் பயன்பாட்டுக்காக கோவில் அருகே குடமுருட்டி ஆற்றங்கரையில் படித்துறை இருந்து வந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது. இதை அடுத்து அருகில் இருந்த படித்துறை முற்றிலும் அகற்றப்பட்டது. தற்போது படித்துறை இருந்த பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது. எனவே மீண்டும் அந்த படித்துறையை கட்டித்தரவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்