கூடூர் ஊராட்சியில் நாரணமங்கலம்-தப்பளாம்புலியூர் இடையே ரூ.2¼ கோடியில் தார்ச்சாலை
கூடூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி குமார் தலைமையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
விளமல்,
திருவாரூர் ஒன்றியம் கூடூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி குமார் தலைமையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நாரணமங்கலம் திருவாச குளத்தில் 2 படித்துறை கட்டப்பட்டு உள்ளது. மொச குளம் பகுதியில் இருந்து கீழத்தெரு வரை 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.28 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. கூடூர் மாரியம்மன் கோவில் தெருவில் ரூ.6.86 லட்சத்திலும், நாரணமங்கலத்தில் இருந்து தப்பளாம்புலியூர் வரை 4 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.2.36 கோடி மதிப்பீட்டிலும் தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஊராட்சி பகுதியில் 4 இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் ரூ.12 லட்சம் செலவிலும் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல கொரோனா தடுப்பூசி முதல் தவணை 200 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.