தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 20 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 20 பேரை போலீசார் கைது செய்தனர்;
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக, உரிய அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படுகிறதா என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 122 மதுபாட்டில்கள், ரூ.1,615 ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.