திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்; செங்கல் சூளை ஊழியர் சாவு

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் செங்கல் சூளை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-07-22 23:24 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஆயில்சேரி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி முருகன் வேலையின் காரணமாக மோட்டார்சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். கோலப்பஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவர் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்