கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் சாவு

மேலூர் அருகே கார் மோதியதில் முன்னாள் ராணுவ வீரர் இறந்தார்.;

Update: 2021-07-22 20:37 GMT
மேலூர்,

மேலூர் அருகே உள்ள சின்னசூரக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சோனைதேவன் (வயது 65). முன்னாள் ராணுவ வீரர். இவர் இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு நான்கு வழி சாலையில் வந்துள்ளார். தெற்குதெருவில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்துக்கு பெட்ரோல் போடுவதற்காக சாலையின் குறுக்கே திரும்பியுள்ளார். அப்போது அவரது பின்பக்கத்தில் மதுரை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று, இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சோனைதேவன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்