29 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் காரணமான சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா ெதாற்று குறைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 389 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கினாலும் ஊரடங்கு தளர்வுகள் இருப்பதால் வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அதோடு பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் கொரோனா பரவல் சங்கிலி உடைப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. எனவே முககவசம், சமூக இடைவெளிைய பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.