பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை
பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உசிலம்பட்டி,ஜூலை.
உசிலம்பட்டி வி.ஐ.பி நகரைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி இன்பரேகா. இவர் நாட்டாமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராமர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார்.
இந்த நிலையில் ஆசிரியை இன்பரேகாவுக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மன வேதனையில் இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.